அமைச்சர் ராஜகண்ணப்பன், காந்திக்கு கூடுதல் இலாக்கா.!! கவர்னர் ரவி ஒப்புதல்.!!
Governor Ravi approved additional Ministers Rajakannappan Gandhi
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும், அபராதம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் என சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இன்று காலை வழங்கிய தீர்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதால் அவர் வகித்து வந்த அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளையும் இழந்துள்ளார். இதன் காரணமாக கவனித்து வந்த உயர்கல்வித்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்குமாறு ஆளுநர் ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி இருந்தார்.
அந்த கடிதத்தை ஆளுநர் ஏற்று கொண்டதாக ஆளுநர் மளிகை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் "பொன்முடி முன்பு கையாண்ட தொழில்நுட்பக் கல்வி, மின்னணுவியல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உள்ளிட்ட உயர்கல்வித்துறை உள்ளிட்ட உயர்கல்வித் துறைகள் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்படும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பரிந்துரைக்கு மாண்புமிகு ஆளுநர் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், ஏற்கனவே வகித்து வந்த பிற்படுத்தப்பட்டோர் நலம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலம் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் நலம் ஆகிய இலாகாக்களை கூடுதலாக வகித்துள்ளார். அதேபோன்று திரு.ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் கவனித்து வந்த காதி மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் இலாகாக்கள் கூடுதலாக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் திரு.ஆர்.காந்திக்கு ஒதுக்கப்படும் என்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் பரிந்துரைக்கும் மாண்புமிகு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்" என அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Governor Ravi approved additional Ministers Rajakannappan Gandhi