கவர்னரின் தேநீர் விருந்து; பா.ஜ.க ,- அ.தி.மு.க மற்றும் தேமுதிக பங்கேற்பு...! - Seithipunal
Seithipunal


குடியரசு தினத்தை முன்னிட்டு, கவர்னர் ரவி அவர்கள்  தேநீர் விருந்தளித்துள்ளார். இந்த விருந்தில் அ.தி.மு.க.,மற்றும் பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டுள்ளன.

குடியரசு தினத்தை முன்னிட்டு கவர்னர் மாளிகையில் தேநீர் விருந்து அளிப்பது வழக்கம். இந்தாண்டு, இந்த விருந்தை புறக்கணிக்கப் போவதாக தமிழக அரசு, தி.மு.க., காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், த.வெ.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்து இருந்தன.

இந்நிலையில், கவர்னர் மாளிகையில் இன்று மாலை தேநீர் இடம்பெற்றது. குறித்த விருந்தில் ஐகோர்ட் நீதிபதிகள் மற்றும் பா.ஜ., அ.தி.மு.க.,- த.மா.கா., உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டன.

அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பாலகங்காவும், பா.ஜ., சார்பில் அண்ணாமலை, எச்.ராஜா, சரத்குமார், த.மா.கா., தலைவர் வாசன், தே.மு.தி.க., துணைச்செயலாளர் சுதீஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சிக்கு வந்த ஜெயக்குமார், பா.ஜ.,வின் எச்.ராஜா, சரத்குமார் ஆகியோருடன் கைகுலுக்கி சிரித்து பேசியதோடு, பிறகு அங்கு வந்த அண்ணாமலையும், ஜெயக்குமாருடன் கைகுலுக்கி பேசினார். 

பிறகு ஜெயக்குமார், எச்.ராஜா குறித்து நகைச்சுவையாக கூற, அதற்கு அண்ணாமலை பதிலளித்தார்.அதற்கு எச்.ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோர் சிரித்தபடி இருந்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Governors tea party BJP and AIADMK participation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->