குஜராத் தேர்தல் : ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா முன்னிலை.!
Gujarat Assembly Election jadeja wife lead
182 உறுப்பினர் சட்டசபைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில், இன்று அதற்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக 37 வாக்கு எண்ணும் மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதன் படி, இன்று மதியத்திற்குள் குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளுமா? இல்லை இத்தனை வருடம் ஆட்சியை இழந்து தவித்த காங்கிரஸ் ஆட்சியை பிடிக்குமா? இல்லை மாநிலத்தில் புதிய வரவாக மாறியிருக்கும் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்குமா? என்பது தெரிந்துவிடும்.
இதையடுத்து, மாநிலத்தில் ஆட்சியமைப்பதற்கு 92 உறுப்பினர்களின் ஆதரவு வேண்டும் என்ற நிலையில், இது மோடியின் சொந்த மாநிலம் என்பதால், பா.ஜனதா 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் என்று கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
இதில், குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்ட இந்திய கிரிக்கெட் கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா ஜடேஜா முன்னிலையில் உள்ளார்.
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பாக ஜாம்நகர் வடக்கு தொகுதியில் ரிவாபா ஜடேஜா போட்டியிட்டுள்ளார். இவருக்காக ரவீந்திர ஜடேஜா தீவிர பிரச்சாரம் செய்தார்.
இந்த நிலையில், இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளரைவிட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் ரவீந்திர ஜடேஜாவின் மனைவி ரிவாபா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.
அந்த வகையில் குஜராத் சட்டமன்ற தேர்தலில் தற்போதைய நிலவரப்படி 126 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிக்கிறது.
குஜராத் முன்னிலை நிலவரம்;
மொத்த தொகுதிகள்-182
பாஜக-140
காங்கிரஸ் -30
ஆம் ஆத்மி கட்சி -5
மற்றவை-1
இமாச்சலப் பிரதேசம் முன்னிலை நிலவரம் ;
மொத்த தொகுதிகள் -68
பாஜக-27
காங்கிரஸ் -28
ஆம் ஆத்மி கட்சி -0
மற்றவை-5
English Summary
Gujarat Assembly Election jadeja wife lead