குஜராத் சட்டமன்ற தேர்தல் : முதற்கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு.! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டமன்றத் தேர்தலில் முதல் கட்டத் வாக்குப்பதிவு நடைபெறும் 89 தொகுதிகளில் இன்றுடன் பிரச்சாரம் நிறைவடைகிறது.

குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு, பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இதனால் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. குஜராத் மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்கு ஆளும் பாஜக கட்சி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அசேதமயம் பாஜகவுக்கு போட்டியாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன.

குஜராத் சட்டப்பேரவை தேர்தல் இரண்டு கட்டமாக நடைபெறும் நடைபெறுகிறது. அதன்படி, முதல்கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1 ஆம் தேதியும், 2-ம் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் டிசம்பர் 8 ஆம் தேதி எண்ணப்படும். 

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு டிசம்பர் 1ஆம் தேதி மற்றும் 5 தேதி என்று இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளில் டிசம்பர் 1ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அந்த 89 தொகுதிகளிலும் இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Gujarat Assembly Elections Campaigning for the first phase of the election ends today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->