#திடீர்திருப்பம் | இன்று மாலை குஜராத் செல்லும் ஓபிஎஸ் - அதிகாரபூர்வ அறிவிப்பு?! - Seithipunal
Seithipunal


குஜராத் சட்டமன்ற பொது தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 156 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன், ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க உள்ளது.

காங்கிரஸ் கட்சி 17 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி ஐந்து இடங்களையும், சுயேட்சை வேட்பாளர்கள் மூன்று இடங்களையும், சமத்துவாதி கட்சி ஒரு இடத்தையும் கைப்பற்றினர்.

இந்த நிலையில், நாளை குஜராத் மாநில முதலமைச்சர் பதவி ஏற்பு விழா நடைபெறவுள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்வதற்காக, இன்று மாலை குஜராத் செல்ல உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

பதவி ஏற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ளும் நிலையில், ஓ பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து பேசுவதற்காகவே குஜராத் செல்ல இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.

அண்மையில் டெல்லியில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில், அதிமுக சார்பாக, அக்கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று குறிப்பிட்டு, எடப்பாடி பழனிசாமியை மத்திய அரசு அழைத்திருந்தது.

இதற்கு ஓ பன்னீர்செல்வம் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் தெரிவித்திருந்த நிலையில், தற்போது குஜராத் முதலமைச்சர் பதவி ஏற்பு விழாவிற்கு ஓ பன்னீர்செல்வம் கலந்து கொள்ள, இன்று மாலை குஜராத் செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

gujarat ops opanneerselvam admk gujarat cm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->