பாஜக பொறுப்புகள் மூத்த தலைவர்களிடம் ஒப்படைப்பு!...தேர்தலை எதிர்கொள்ள கட்சி பணியில் தீவிரம்! - Seithipunal
Seithipunal


மகாராஷ்டிரா மாநிலத்தில் தற்போது முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், பா.ஜ.கவை சேர்ந்த பட்னாவிஸ் துணை முதலமைச்சராக உள்ளார்.
இவர்களின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் நிறைவு பெறும் நிலையில், நவம்பர் மாதம் அங்கு சட்டசபை தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் தேர்தலை சந்திக்க மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், பூபேந்திர யாதவ் உள்பட 13 மூத்த தலைவர்களிடம் பா.ஜ.க. பொறுப்புகளை ஒப்படைத்துள்ளது.

அதன்படி 8 மண்டலமாக பிரிக்கப்பட்டு இவர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளதாகவும், 6 அமைச்சர்கள் மற்றும் 7 மூத்த தலைவர்கள் ஒவ்வொரு சட்டசபை தொகுதி வாரியாக வெற்றி பெறுவது குறித்து கள ஆய்வு மேற்கொள்வார்கள் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.


கோவா மாநில பா.ஜ.க. பொதுச்செயலாளர் சதீஷ்தோந்த் கொங்கன் மண்டல பகுதியையும்,  தெலுங்கானா பா.ஜ.க. பொதுச்செயலாளர் சந்திரசேகர் கட்சி பிரசாரத்தை கவனிப்பார்கள் என்று கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Handover of BJP responsibilities to senior leaders Intensity in party work to face elections


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->