காங்கிரசின் கண்ணில் குத்தி, தோல்வியை பரிசாக கொடுத்த ஆம் ஆத்மி! வரலாறு படைத்த பாஜக! - Seithipunal
Seithipunal


அரியானாவில் காங்கிரஸ் தோல்வியடைய ஆம் ஆத்மி காரணமாக அமைந்துள்ளது அம்பலமாகியுள்ளது. 

ஹரியானாவில் உள்ள மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.

ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு 46 இடங்கள் போதும் என்ற நிலையில், பாரதிய ஜனதா கட்சி 48 க்கும் அதிகமான இடங்களில் தற்போது முன்னிலை பெற்று, மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைப்பது உறுதியவிட்டது.

இந்த தேர்தலை பொறுத்தவரை இண்டி கூட்டணி சிதறி காங்கிரஸ் தனியாகவும், ஆம் ஆத்மி தனியாகவும் களமிறங்கி இருந்தது.

அப்போதே அரசியல் விமர்சகர்கள் காங்கிரசின் தோல்விக்கு ஆம் ஆத்மி வழி வகுக்க போகிறது என்று விமர்சித்து இருந்தனர். 

அதனை உறுதிப்படுத்தும் விதமாக காங்கிரஸ் தோல்வியடைந்த பல தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு முக்கியத்துவம் வைத்ததாக அமைந்துள்ளது.

போட்டியிட்ட பல தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அனைவரும் டெபாசிட் இழக்கும் நிலை ஏற்பட்டு வெறும் 2 சதவீதற்கும் கீழ் மட்டுமே வாக்குகளை பெற்றுள்ளது. இருப்பினும் அந்த 2 சதவிகித வாக்கு தான் காங்கிரசின் தோல்விக்கு தற்போது காரணமாக அமைந்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hariyana Election Result 2024 Congress AAP BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->