ஜிகாதி அமைப்புகளிடம் இருந்து இந்து மக்களை பாதுக்காக்க உதவி எண்.!
Helpline number Hindu people Jihadi organizations
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரர் கொலை செய்யப்பட்டதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்பட வேண்டுமென்று பஜ்ரங் தள் தொண்டர்களை வி.எச்.பி கேட்டுக்கொண்டது.
இதனை தொடர்ந்து, இந்துக்களை ஜிகாதி அமைப்புகளிடம் இருந்து பாதுகாப்பதற்காக நாட்டின் 20 பகுதிகளை சேர்ந்த பஜ்ரங் தள் தொண்டர்களின் உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் 44 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வகையில் உத்தரப் பிரதேசம் மாநிலம், மேற்கு உ.பி. கான்பூர், காசி, கோரக்பூர், அவாத் என 5 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன. இதனை போன்று குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், டெல்லி, கர்நாடகா, பிஹார், ஒடிசா, மத்தியப் பிரதேசம் என 10 பகுதிகளாக பிரிக்கப்பட்டு உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக வி.எச்.பி தேசிய செய்தி தொடர்பாளர் வினோத் பன்சால் தெரிவிக்கையில்,
"இந்துக்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் சட்டப்படியும், ஜனநாயக விதிமுறைகள் படியும், பஜ்ரங் தள தொண்டர்கள் உதவி செய்வார்கள். இதனை போன்று, மதரீதியாக பிரச்சினை ஏற்பட்டால், உடனடியாக மாவட்ட நிர்வாகத்தினரிடம் தகவல் தெரிவிப்பார்கள்."என்ற வர் தெரிவித்துள்ளார்
English Summary
Helpline number Hindu people Jihadi organizations