இது தான் நீட் ரகசியமா? திமுக மீண்டும் ஏமாற்ற பார்க்கிறது! ஹெச்.ராஜா எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலின் போது திமுக ஆட்சி அமைந்ததும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தற்போதைய முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் வாக்குறுதி அளித்திருந்தனர். அதேபோன்று திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு விலக்கு குறித்து வாக்குறுதி இடம் பெற்று இருந்தது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நீட்டுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

அதற்கு ஒப்புதல் அளிக்காத தமிழக ஆளுநர் குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிய நிலையில் தற்போது அந்த மசோதா நிலுவையில் உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தது போல் மத்தியில் திமுக அங்கம் வகிக்கும் கூட்டணி ஆட்சி அமைந்தால் மட்டுமே நீட் தேர்வு ரத்து செய்ய முடியும்.

எதிர்வரும் 2024 நாடாளுமன்ற பொது தேர்தலில் திமுக அங்க வகிக்கும் கூட்டணிக்கு வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும்" என உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இந்த நிலையில் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உதயநிதி ஸ்டாலினின் பேச்சை கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

அப்போது பேசிய அவர் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலுக்காக திமுக மீண்டும் நீட் விவகாரத்தை கையில் எடுத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் "மீண்டும் தமிழக மக்களை 2024 ஏமாற்றுவதற்காக திமுக இந்த நீட் பிரச்சனையை கையில் எடுத்துள்ளது. 

போன முறை ரகசியம் இருக்கு என சொன்னவர்கள் இந்த முறை மத்தியில் நாங்கள் வந்தால் தான் என சொல்கிறார்கள். ஏன் போன முறை மத்தியில் வந்தால் தான் என தெரியாதா? தங்களுக்கு ரகசியம் தெரியும், வந்ததும் முதல் கையெழுத்து என சொன்னாங்க. இப்ப மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தான் நீட் தேர்வு வரத்தை என சொல்கிறார்கள். திமுக மக்களை மீண்டும் ஏமாற்ற பார்க்கிறது"எனஎச்சரிக்கை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HRaja criticizes Udayanidhi Stalin comment on NEET secret


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->