முதலமைச்சர் பதவிக்காக பழனி சென்றேன்?....திருமாவளவன் பரபரப்பு பேச்சு! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோயிலுக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். அதிலும் பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும்.

இந்த சூழ்நிலையில், விடுதலைகள் சிறுத்தை கட்சி தலைவரும், சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.  பின்னர் ஸ்ரீமத் போகர் சமாதியில் சிறப்பு தரிசனம் செய்தார். தொடர்ந்து சிறிது நேரம் தியானமும் செய்தார். பழனி ஆதீனம் சிவானந்த புலிப்பாணி பாத்திர சுவாமிகள் சார்பாக, கோவில் மரியாதை செய்யப்பட்டு, அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், பெரும் பேசு பொருளாக மாறியது. இந்த நிலையில், பழனி சென்றது குறித்து  திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், எனக்கு எந்த நேர்த்திக்கடனும் கிடையாது என்றும், தேர்தலில் நிறைய இடங்கள் வாங்கி தா முருகா என்று கேட்க வரவில்லை  என்று கூறினார்.

அமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் அல்லது முதலமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக செல்லவில்லை என்றும், எனது முன்னோர்கள் வாழ்ந்த இடம் அது என்பதால் பழனிக்கு வந்ததாக தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

I went to palani for the post of chief minister thirumavalavan sensational speech


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->