பாஜக ஆட்சிக்கு வந்தால் "முஸ்லீம் இடஒதுக்கீடு" ரத்து.!! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, மத்திய பிரதேசம், மிசோரம், சட்டீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தெலுங்கானாவில் வரும் நவம்பர் 30ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. தெலுங்கானா மாநிலத்தை பொருத்தவரை மும்முனை போட்டியில் நிலவி வருகிறது.

மொத்தம் 119 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட தெலுங்கானாவில் காங்கிரஸ், பாஜக, பாரதிய ராஷ்ட்ரிய சமாதி இடையே போட்டி நிலவுகிறது. சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சரியாக ஒரு மாதம் உள்ள நிலையில் அரசியல் கட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்த நிலையில் தெலுங்கானாவில் நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய மத்திய கலாச்சார துறை அமைச்சர் கிஷன் ரெட்டி தெலுங்கானாவில் பாஜக ஆட்சி அமைந்தால் இஸ்லாமியர்களின் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வழங்கப்படும் என பேசி உள்ளார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. ஏற்கனவே நடைபெற்று முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் இதே வாக்குறுதி அளித்த பாஜக படுதோல்வியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

If BJP comes to power in Telangana Muslim reservation will be cancelled


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->