அதிமுக ஆய்வுக் கூட்டத்தில் அடிதடி, தள்ளு முள்ளு!....மதுரையில் பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


மதுரையில் நடைபெற்ற  அதிமுக கள ஆய்வுக்கு கூட்டத்தில் அவர்களுக்குள் தலைமை கழக நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் கடந்த 11-ம் தேதி நடைபெற்ற அதிமுக கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டத்தில், கழகத்தில் கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாக கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது சம்பந்தமான கருத்துகளை வழங்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், மதுரை சந்தைப்பேட்டை பகுதியில் இன்று கிளை, வார்டு, வட்டக் கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள் குறித்த அதிமுக கள ஆய்வுக்கு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தொண்டர்களுக்கு இடையே அடிதடி மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட்டத்தில், வார்டு பகுதி செயலாளர்கள், முக்கியமான நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்க பெறவில்லை என்று, அவர்களுக்குள் தலைமை கழக நிர்வாகிகள் அடிதடியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In the aiadmk study meeting beating pushing and barbs great commotion in madurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->