அடுத்த பரபரப்பு... ரூ.4.5 கோடி பாஜக வேட்பாளரின் பணமா? போலீசார் தீவிர விசாரணை.!! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் நேற்று இரவு ரூபாய் 4.5 கோடி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில் அவர்கள் பாஜக நிர்வாகிகள் என்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டதன் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் பிடிபட்ட பாஜக நிர்வாகி சதீஷ், அவருடைய சகோதர நவீன், லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகியோரை கைது செய்து தாம்பரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். 

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நெல்லை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என்பதை பிடிபட்ட நபர்கள் ஒப்புக் கண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

இந்த பணம் புரசைவாக்கத்தில் உள்ள பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் பணி புரியும் நபர்கள் 4.5 கோடி சென்னையில் இருந்து நிலைக்கு எடுத்துச் செல்வது தெரிய வந்துள்ளது. 

இதனை அடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட நபர்களிடம் தேர்தல் பண பட்டுவாடா செய்வதற்காக 4.5 கோடி ரூபாய் நெல்லைக்கு எடுத்து செல்லப்படுகிறதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனிடமும் இது கறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Info flying squad seized rs4crs 50 lakhs BJP candidate nainar nagenthiran money


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->