மத்தியில் மக்கள் விரோத ஆட்சி அகன்று, நல்லாட்சி அமைந்திட 75-வது சுதந்திர தினத்தில் சபதம் ஏற்போம் : இந்திய தேசிய லீக்.!
INL wish IndependenceDay
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பல கனவுகளோடும், கற்பனைகளோடும் விலை மதிப்பற்ற பல்லாயிரக்கணக்கான இன்னுயிர்களை ஈந்து பெற்ற இவ்விடுதலை நன்நாளில், அனைவருக்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்களை இந்திய தேசிய லீக் சார்பில் தெரிவித்து கொள்கிறேன்.
இந்தியாவை காப்பாற்ற, இந்தியர்கள் ஒன்றுபட்டு நின்று, வெறியூட்டுகிற தீய சக்திகளிடமிருந்து நாட்டையும், நாட்டு மக்களையும், அரசியல் சட்ட அடிப்படைகளையும் காப்பாற்ற சங்கற்பம் மேற்கொள்ளுமாறு அனைவரையும் இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டில் அடியெடுத்துவைக்கின்றது. உலக நாடுகளில் இந்தியா முன்னிலை வகிக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆனால் இன்று இந்தியா முன்னேறுவதற்கு பல தடை கற்கள் ஏற்பட்டுள்ளன. இவையெல்லாம் வருங்காலத்தில் மாற்றம் அடைந்து ஒரு முன்னேற்றகரமான சூழ்நிலை உருவாகி அமைதியும், முன்னேற்றமும், அனைத்து மக்களுக்கும் ஏற்படவும், சுதந்திர தினத்தில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.
மத்திய மக்கள் விரோத, ஜனநாயக விரோத, பாசிச பா.ஜ.க. ஆட்சியை அகற்றிட மதசார்பற்ற ஆட்சி மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்மை அர்ப்பணித்து, விடுதலைக்கு வித்திட்ட தியாகிகளை இன்று நினைவு கூர்ந்து சபதமேற்போம். இந்த சுதந்திர தினம் தொடங்கி, அடுத்த சுதந்திர தினத்திற்குள் இந்தியாவிலும் பல அதிசயங்கள் நிகழ நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடுவோம் என்பதோடு, மீண்டும் ஒரு 75 வது சுதந்திர தின வாழ்த்துக்களை இந்திய தேசிய லீக் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்".