மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடலா? - கனிமொழிக்கு தமிழிசை கேள்வி! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடியில் மழை பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவித்த கனிமொழியின் பேச்சை பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். 

மன்னார் வளைகுடா, இலங்கை கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, துாத்துக்குடியில் அதி கனமழைக்கான, 'ரெட் அலெர்ட்' எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில், நேற்று முன்தினம் அடைமழை வெளுத்து வாங்கியது.

இந்நிலையில்,கடந்த 24 மணிநேரத்தில் தென்தமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், வடதமிழகத்தில் அநேக இடங்களிலும் மழை பெய்துள்ளது. குறிப்பாக, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை பெய்துள்ளது.

தூத்துக்குடியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த கனமழையின் காரணமாக மாநகராட்சியில் உள்ள தாழ்வான பகுதிகளில் பெரும்பாலும் மழைநீர் சூழ்ந்து காணப்படுகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கனிமொழி எம்.பி. நேற்று நேரில் பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தூத்துக்குடியில் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவித்தார். கனிமொழியின் இந்த பேச்சை பாஜகவை சேர்ந்த தமிழிசை சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

"தூத்துக்குடியில் மழையால் பாதிப்பில்லை என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார். ஊடகங்கள் வெளியிடும் செய்திகளெல்லாம் பொய்யா? நீங்கள் கூறுவது அப்பட்டமான பொய்யா?

முழங்கால் அளவு தண்ணீரில் நடந்து கொண்டு மழையால் பாதிப்பு இல்லை என்று மக்களை ஏமாற்றுவதுதான் திராவிட மாடல்? மழை, வெள்ள பாதிப்பால் மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கும் போது மழையால் பாதிப்பில்லை என்று கூறுகிறீர்களே? உங்கள் பார்வையில் மழை, வெள்ள பாதிப்பின் அளவுகோல் என்ன?"
இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it the Dravidian model to deceive the people Question to Kanimozhi


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->