டி சர்ட் கேஷுவல் உடையா?...உதயநிதி உடை விவகாரம் : தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
Is t shirt casual wear udhayanidhi dress issue madras high court orders tamil nadu government to respond
சென்னை உயர்நீதிமன்றத்தில் சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞ்சர் சத்தியகுமார் என்பவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனு மீதான வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டி சர்ட் அணிவது அரசாணைக்கு எதிரானது என மனுதாரர் வாதிட்டார்.
இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், தமிழக அரசின் அரசாணை அரசு ஊழியர்களுக்கு தான் பொருந்தும் என்று விளக்கமளித்தார்.
இந்த நிலையில் அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு பொருந்துமா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், டி சர்ட் கேஷுவல் உடையா என்றும், அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா என்று பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.
English Summary
Is t shirt casual wear udhayanidhi dress issue madras high court orders tamil nadu government to respond