பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர்கள் புறக்கணிப்பது நல்லதல்ல! கொந்தளித்த தமிழிசை! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், சென்னை கிண்டியில் மருதுபாண்டியர்களின் 223-ம் ஆண்டு நினைவு நாளில் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்ளை சந்தித்த அவர் தெரிவித்ததாவது , "கல்வி நிகழ்வுகளில் அரசியலை கலப்பது தவறானது. குறிப்பாக, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை அரசியலாக்குவது நல்லதல்ல. இது மாணவர்களின் வெற்றியை கௌரவிக்கும் நிகழ்வாகும், எனவே, கல்வி விழாக்களில் அரசியல் கருத்துக்கள் இடம் பெறக்கூடாது," என்றார்.

இதையும் படியுங்க : 10 லட்சம் பேர் வெளியேற்றம்! கரையை கடந்த டானா புயல்

இது தொடர்பாக சமீபத்தில் அமைச்சர்கள் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சிகளை புறக்கணிப்பது குறித்தும் அவர் தனது கருத்துகளை வெளிப்படுத்தினார். "பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களில் அமைச்சர்கள் பங்கேற்காதது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இது அரசியலையும் தாண்டிய, மாணவர்களின் முயற்சியையும் சாதனைகளையும் கௌரவிக்கும் நிகழ்வு. இத்தகைய நிகழ்ச்சிகளை புறக்கணிக்க வேண்டாம்" என்று தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தினார்.

மேலும், "புதிய கல்விக் கொள்கைகள், துணை வேந்தர் நியமனம் போன்றவை அரசியலாகாமல், கல்வி வளர்ச்சிக்கான முயற்சியாகவே இருக்க வேண்டும்," என்றார். 

இதையும் படிங்க : 

தீபாவளி : ரயில் நிலையம், ரயில்களில் தீவிர பாதுகாப்பு!

 

அவரது கருத்துக்கள் தமிழக அரசியல் சூழலிலும், கல்வித்துறையில் அரசியல் தலையீடு குறித்த விவாதத்தையும், எதிர்கட்சிகளின் அணுகுமுறையையும் கேள்விக்குறியாக்கின. 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவுக்கு சுலபமாக வெற்றி கிடைக்காது என்றும், தமிழக அரசியலில் கூட்டணி அரசுகளின் நிலை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It is not good for ministers to ignore graduation ceremonies Tamilisai Soundararajan


கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த கனமழையை தமிழக அரசு எதிர்கொண்ட விதம்...!




Seithipunal
--> -->