மழை பெய்வதை தடுத்து நிறுத்தும் TVK!...பூஜை போட்டு தவெக-வினர் செய்த அதிர்ச்சி செயல்! - Seithipunal
Seithipunal


தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டின் போது மழை வராமல் இருப்பதற்காக, வி.சாலையில் உள்ள அய்யனாரப்பன் கோவிலில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு இந்த மாதம் 27-ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில்  மாலை 4 மணிக்கு நடைபெறும் என்று  நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இதற்கான பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக நாகரீகமான முறையில் வரவேண்டும் என்றும்,  குறிப்பாக மாநாட்டுக்கு பெண்களை பாதுகாப்பாக அழைத்து வர வேண்டும். அவர்களது பாதுகாப்பை மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தொண்டர்களுக்கு தவெக கட்சி சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது.

இந்த நிலையில், மாநாட்டின் போது மழை வராமல் இருப்பதற்காக வி.சாலையிலுள்ள ஏரிக்கரை அய்யனாரப்பன் கோவிலில் நேற்று த.வெ.க கிளை, கிராம பொது மக்கள் சார்பில் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் அந்த புனிதநீர் மாநாடு திடலில் தெளிக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

It will stop the rain a shocking act done by tvk offering pooja


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->