முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர்ந்த வழக்கில்., சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


வேதா இல்லத்தை கையகப்படுத்தியதை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய, அதிமுக தரப்புக்கு அனுமதி வழங்கி, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதாக அதிமுக அரசு அரசனை பிறப்பித்து அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்த அறிவிப்பை எதிர்த்தும், வேதா நிலையத்தை கையகப்படுத்தியதை எதிர்த்தும் ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவிக்கப்பட்ட தீபா, தீபக் தரப்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், வேதா நிலையத்தை கையகப்படுத்திய நடவடிக்கைகளை ரத்து செய்து, வேதா இல்லத்தின் சாவியை ஜெ.தீபா மற்றும் ஜெ.தீபக் ஆகியோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களின் போயஸ் கார்டன் இல்ல விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதற்கு அதிமுகவிற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதா இல்லம் அரசுடமையாக்கப்பட்டது செல்லாது என்று தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், 

முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை நிர்வாகி என்ற முறையில் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணை செய்திருந்த சென்னை உயர்நீதிமன்றம், மேல்முறையீடு செய்வதற்கான அனுமதியை வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த வழக்கு வோசரணையை வரும் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டுள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

j illam case issue chennai hc order dec15


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->