பினாமி அக்கவுண்டில் ரூ. 75 கோடி - ED யிடம் வசமாக சிக்கிய ஜாபர் சாதிக்..!! - Seithipunal
Seithipunal



திமுகவின் முன்னாள் நிர்வாகியும், திரைப்படத் தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், வெளிநாடுகளில் இருந்து ரூ. 2, 000 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கடத்தியதாக மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் கடந்த மார்ச் 9ம் தேதி ஜெய்ப்பூரில் வைத்து கைது செய்தனர். 

இதையடுத்து டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்ட ஜாபர் சாதிக்கை சட்ட விரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் அமலாக்கத் துறை கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. இதையடுத்து ஜாபர் சாதிக் திகார் சிறையில் இருந்து மாற்று வாரண்ட் மூலமாக சென்னை அழைத்து வரப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளார். 

நீதிமன்றக் காவலில் இருக்கும் ஜாபர் சாதிக்கை தற்போது 3 நாள் காவலில் எடுத்து அமலாக்கத்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை ஆவடி காமராஜ் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஜோசப் ஸ்டாலின் என்பவருடைய வீட்டில் திடீரென அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். 

மேலும் ஜோசப்பின் மனைவி ஆயிஷா தங்கியுள்ள வீட்டிலும் சோதனை மேற்கொண்டதில் இவர்கள் இருவரும் ஜாபர் சாதிக்கின் பினாமியாக செயல்பட்டுள்ளதும், இவர்களது வங்கிக் கணக்கில் ரூ. 75 கோடிக்கு மேல் பணப் பரிமாற்றம் செய்யப் பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது. 

முன்னதாக ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்கில் இருந்து 40 கோடி ரூபாய் அளவில் பணப் பரிமாற்றம் நடந்துள்ளது அவரிடம் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஜாபர் சாதிக் எங்கெல்லாம் அந்த பணத்தை முதலீடு செய்துள்ளார்? என்னென்ன சொத்துக்கள் வாங்கியுள்ளார்? யார் யாருக்கு பணப் பரிமாற்றம் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை தீவிரமாக விசாரிக்க ஆரம்பித்துள்ளது.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jaffer Sadiq Caught By ED For Transferred Rs 75 Cr to Benami Account


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->