முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி உண்ணாவிரத போராட்டத்தால் மயக்கம்.. மருத்துவமனையில் அனுமதி.! - Seithipunal
Seithipunal


ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திரசேகர் ராவின் ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதற்காக தெலுங்கானாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில், கடந்த வாரம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது காரில் இருந்து இறங்க மறுத்ததால் காரோடு அவரை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஹைதராபாத்தில் காவல்துறையினர் அனுமதி மறுத்த பகுதியில் அம்பேத்கர் சிலை முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே உண்ணாவிரதம் இருந்தார். அந்த வகையில் நேற்றும் 2-வது நாளாக வீட்டில் இருந்தபடி உண்ணாவிரத போராட்டத்தில் அவர் ஈடுபட்டார். தெலுங்கானாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். எனது பாதயாத்திரைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், 3-வது நாளாக இன்று காலை அவரது காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. இதனிடையே சற்று மயக்கமடைந்த நிலையில், ஒய்.எஸ். சர்மிளா உடனடியாக ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் தெலுங்கானா அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jagan Mohan Reddy sister admitted hospital fainted


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->