கருத்துக்கணிப்புகளின் தில்லுமுல்லு அம்பலமாகி விட்டது - ஜெய்ராம் ரமேஷ் கருத்து - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. குஜராத்தில் ஒரு தொகுதியில் பாஜக வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மதியம் 2 மணி நிலவரப்படி, பாஜக கூட்டணி 288 இடங்களிலும், காங்கிரசின் இந்தியா கூட்டணி 236 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.

இன்ன பிற கட்சிகள் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளன. இதன்படி பார்த்தால், மத்தியில் பாஜக மீண்டும் தனித்து ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலவும் என்று தெரிகிறது. மத்தியில் தொங்கு பாராளுமன்றம் அமையவே வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தளத்தில், "இப்போதைய வாக்கு நிலவரம் தனித்து ஆட்சியமைக்க கூடுமளவு பெரும்பான்மையை பாஜக எட்டவில்லை என்பதை உறுதியாக்கி விட்டது. 

இது நரேந்திர மோடிக்கு தார்மீக தோல்வியாகும். இதன் மூலம் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள்  பிரதமர்   மோடியால் கட்டமைக்கப்பட்ட கருத்துக்கணிப்பு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது. பாஜக ஆட்சியமைக்கும் சூழல் உருவானாலும் அதன் கோட்டையான உதிர்ப்பிரதேசத்திலேயே பலத்த அடி வாங்கியுள்ளது " என்று பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jairam Ramesh Says Exit Polls are Totally fraud


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->