ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் இதை செய்யாதீங்க - தமிழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கோரிக்கை!
Jallikattu online issue vijayabaskar
தமிழகத்தில் இந்த வருடம் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் பங்கேற்க ஆன்லைன் முறையில் பதிவு செய்து, டோக்கன் பெறும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த நடைமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சி : சூரியூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை பார்வையிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, "கடந்த காலங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை காலை 8 மணிக்குத் தொடங்கி மாலை 4 மணி வரை நடத்தியதுப் போன்று தமிழக அரசு நடத்த வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் தற்போது பங்கேற்க வேண்டுமெண்டால், ஆன்லைன் முறையில் டோக்கன் பதிவு செய்யும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இத்தனையும் தமிழக அரசு கைவிட வேண்டும்.
ஜல்லிக்கட்டு போட்டிக்கு, கிராம கமிட்டியினர் வெற்றிலைப் பாக்கு வைத்து அழைக்கும் விருந்தோம்பல் பண்பாகும். இந்த முறை ஆன்லைன் பதிவால் கிடைக்க வாய்ப்பில்லை. ஆனால், தமிழக அரசு ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்காக விதிக்கும் விதிமுறைகளைப் பின்பற்ற காளை உரிமையாளர்களும், மாடுபிடி வீரர்களும் தயாராகவே உள்ளனர்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தவிர, தமிழகத்தின் மற்ற பகுதிகளில் கிராம கமிட்டியினரே போட்டிக்கான டோக்கன்களை வழங்குவதுதான் பொருத்தமாக இருக்கும்" என்று விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
English Summary
Jallikattu online issue vijayabaskar