அமைச்சர் பதவிக்கு ஆப்பு! உதயநிதி மீதான குற்றவியல் நடவடிக்கைக்கு ஜம்மு நீதிமன்றம் அனுமதி! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 2ம் தேதி சென்னையில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளராக சங்கம் சார்பில் நடைபெற்ற சனாதான ஒழிப்பு மாநாட்டில் சனாதான தர்மத்தை டெங்கு, மலேரியா, கொசு போன்று சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசி இருந்தார்.

இந்த மாநாட்டில் தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்ட நிலையில் அவர் முன்பே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இவ்வாறு பேசியது நாடு முழுவதும் இந்துக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சனாதனம் குறித்து திமுக அமைச்சர் பேசியதற்கு எதிராக பாஜகவினர் மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் மற்றும் பல்வேறு மாநிலங்களில் வழக்கு தொடர்ந்தனர். 

அதேபோன்று திமுக அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்ததோடு அறிவுரைகளை வழங்கினர். இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கு விசாரணையில் ஒத்திவைத்தது.

உச்ச நீதிமன்றம் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தமிழக அரசு பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நிலையில் தற்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக ஜம்மு நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மிக முக்கியமான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு மாநிலத்தில் உள்ள ஏகம் சனாதன பாரத தளத்தின் உறுப்பினர் அதுல் ரெய்னா என்பவர் தொடர்ந்த வழக்கில், தமிழக அமைச்சர் உதயநிதி மீது குற்றவியல் நடவடிக்கை முன்னெடுக்க ஜம்மு காவல்துறையை சேர்ந்த மூத்த காவல் கண்காணிப்பாளர் ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மேற்கொள்ளலாம் என ஜம்மு நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jammu court allow take action against udayanidhi in sanatana issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->