நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா?- ஜெயக்குமார்
Jayakumar ask that the Chief Minister ready for a direct debate
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், தமிழ்நாட்டின் உரிமைகளை மத்திய அரசுக்கு தி.மு.க தாரை வார்க்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்தித்த ஜெயக்குமார் கூறியதாவது,"மக்கள் அனுபவிக்கும் எண்ணற்ற கொடுமைகளை பற்றி விவாதிக்க தயாரா ? என எதிர்க்கட்சி தலைவர் கேட்டார். தமிழக உரிமைகளை விட்டுக் கொடுத்தது யார்..? நேரடி விவாதத்திற்கு முதலமைச்சர் தயாரா ?

எதிர்க்கட்சி தலைவருக்கு நேரடியாக முதலமைச்சர் பதிலளித்திருந்தால் பாராட்டி இருப்போம். நீட், காவிரி உள்ளிட்ட பல விஷயங்களில் தமிழகத்தின் உரிமையை திமுக விட்டுக் கொடுத்துள்ளது. மேலும் திமுகவில் முறைவாசல் செய்து வருபவர் அமைச்சர் ரகுபதி.
இதில் முறைவாசல் செய்பவர்களுக்கொல்லாம் நாங்கள் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.சட்டத்துறை அமைச்சராக உள்ள ரகுபதி அதிமுகவில் அடையாளம் காணப்பட்டவர். அமைச்சர் ரகுபதிக்கு மானம், ரோஷம் இருக்கிறதா ?
கோபாலபுரத்தின் கொத்தடிமையான ரகுபதியிடம் நாங்கள் பேச முடியாது. முதல்வரை விவாதத்திற்கு அழைத்தால் ரகுபதி வருகிறார். ஆட்டை அழைத்தால் குட்டி வருகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் இவர் பேசிய சர்ச்சையான பேச்சு தற்போது அரசியல்வாதிகளிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
Jayakumar ask that the Chief Minister ready for a direct debate