முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனு மீண்டும் தள்ளுபடி.!
Jayakumar bail petition dismissed
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 19-ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின் போது, தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு வாக்குச்சவடியில் கள்ள ஓட்டு தொடர்பாக திமுக மற்றும் அதிமுக வினரிடையே பிரச்சினை எழுந்தது.
அந்த பிரச்சனை தொடர்பான புகாரில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது 10 பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஜாமீன் வழங்கக் கோரி ஜெயக்குமார் தரப்பில் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி ஆனது.
இதனையடுத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கக் கோரி மீண்டும் ஜெயக்குமர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் முடிவில், ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப் பட்டிருந்தது.
இந்நிலையில் மாலையில் தீர்ப்பு வழங்கிய சென்னை முதன்மை அமர்வு ஜாமீன் வழங்க மறுத்த நீதிமன்றம், கைது செய்யப்பட்டு சில நாட்கள் என்பதால் விசாரணை ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது. எனவே ஜாமின் வழங்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தது.
English Summary
Jayakumar bail petition dismissed