அண்ணன் முத்துசாமிக்கு அந்த பெயர் வரக்கூடாது.! பங்கமாக கலாய்த்த ஜெயக்குமார்.!! - Seithipunal
Seithipunal


அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்றைய செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் "செந்தில் பாலாஜி இருந்த வரை டாஸ்மாக் கடைகளில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அண்ணன் முத்துசாமி பதவியேற்றதிலிருந்து பாட்டிலுக்கு 5 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. அண்ணன் முத்துசாமி இடம் கேட்கிறேன், செந்தில் பாலாஜியின் பாரம்பரியம் என்ன? உங்களுடைய பாரம்பரியம் என்ன?

டாஸ்மாக் பொறுத்தவரை ஆய்வு செய்தது தவறு. அதுவும் குடிப்பதற்காக ஆய்வு செய்த கேடுகெட்ட அரசாங்கம் வேறு எதுவும் கிடையாது. காலை முதல் இரவு வரை குடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று இந்த விடியா அரசாங்கம் சொல்கிறது. எம்ஜிஆர் காலத்தில் இருந்து பாரம்பரியமாக வந்த ஒருவர் இதற்காக முழுமூச்சாக பாடுபடுகிறார் என்பதுதான் வருத்தமாக உள்ளது.

திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 9000 கோடி ரூபாய் வரை டாஸ்மாக் வருமானம் அதிகரித்துள்ளது. அப்படி என்றால் குடிப்பவர்கள் அதிகரித்துள்ளனர் என்று தானே அர்த்தம். அவ்வாறு என்றால் அதிக குடிகாரர்களை உருவாக்குவது தான் இந்த அரசாங்கத்தின் அலட்சியமா.? 

செந்தில் பாலாஜி 10 ரூபாய் வாங்கினார். ஆனால் இப்போது இவர் சொல்லி வாங்குகிறார்களா என்பதை தெரியாது, ஆனால் ஒரு பாட்டிலுக்கு 5 ரூபாய் வாங்கப்படுகிறது. 10 ரூபா செந்தில் பாலாஜி பெயர் போய், 5 ரூபாய் முத்துசாமி என்ற பெயர் அண்ணனுக்கு வர வேண்டுமா.? வரக்கூடாது என்பதுதான் எங்களுடைய விருப்பமும் கூட.

அண்ணன் முத்துசாமி ரொம்ப டீசன்ட் ஆனவர். 5 ரூபாய் வசூல் செய்வதை அண்ணன் உடனடியாக நிறுத்த வேண்டும். திமுக குடும்பத்திற்கு வருமானம் போக வேண்டும் என்பதற்காக துணை போகாதீர்கள்" என அமைச்சர் முத்துசாமியை கலாய்த்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jayakumar criticized minister muthusamy


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->