ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி மீண்டும் கைது.! - Seithipunal
Seithipunal


ஒய் எஸ் ஆர் தெலுங்கானா கட்சி தலைவரும், ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரியுமான ஒய்.எஸ்.ஷர்மிளா தெலுங்கானாவில் ஆட்சியில் உள்ள சந்திரசேகர் ராவின் ராஷ்டிர சமிதி அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்.

இதற்காக தெலுங்கானாவில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார். இதற்காக அவர் மாநிலம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இதில், கடந்த மாதம் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய போது காரில் இருந்து இறங்க மறுத்ததால் காரோடு அவரை கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், தெலங்கானாவில் மகபூபாபாத்தில் நேற்று யாத்திரை மேற்கொண்டிருந்த ஷர்மிளாவை ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியினர் வரவேற்றனர். இதனிடையே ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தொண்டர்கள் ஷர்மிளாவை வரவேற்று வைத்திருந்த  பேனர் மற்றும் ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் சேதப்படுத்தி இருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனிடையே இரு கட்சியின் தொண்டர்களும் மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து ஷர்மிளாவின் பாத யாத்திரைக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதியை இன்று காலை போலீசார் திடீரென ரத்து செய்தனர். இந்த சம்பவம் குறித்து ஷர்மிளாவுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால், இதை ஏற்க மறுத்த ஷர்மிளா மீண்டும் பாத யாத்திரையை தொடர்ந்து மேற்கொள்வதாக கூறியதால் அவரை போலீசார் கைது செய்து ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி  ஒய்.எஸ்.ஷர்மிளா மீண்டும் கைது செய்யப்பட்ட சம்பவம் தெலங்கானா அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jegan mohan Reddy sister sharmila arrested in Telungana


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->