திமுகவை வெளுத்து வாங்கிய ஜெயக்குமார்!...துணை முதல்வராக திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? - Seithipunal
Seithipunal


திமுகவில்  பல்வேறு சீனியர்கள் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க முயற்சி நடப்பது ஏன்? என்றும், துணை முதல்வராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடியுள்ளார்.

சென்னையில் இன்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதும், மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படும் நிலையில், திமுக அரசு இது குறித்து கவலையில்லாமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம் சாட்டினார்.

மேலும், திமுக சங்கரமடம் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கூறியதாக கூறிய அவர்,
திமுகவில் கடுமையாக உழைத்தவர்களுக்கு துணை முதலமைச்சர் பதவி இல்லையா என்று சரமாரி கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், திமுகவில்  பல்வேறு சீனியர்கள் இருக்கும்போது உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி அளிக்க முயற்சி நடப்பது ஏன்? என்றும், துணை முதல்வராக உதயநிதியை தவிர திமுகவில் வேறு எவருக்கும் தகுதி இல்லையா? என்று சாடினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Jeyakumar who whitewashed DMK Is not anyone else in DMK qualified as deputy chief minister


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->