தென்காசி வேட்பாளர் இவரா? Dr.கிருஷ்ணசாமிக்கு‌ புதிய சிக்கல்.!! பாஜகவின் மாஸ்டர் ப்ளான்.!! - Seithipunal
Seithipunal


புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தென்காசி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அதன் பிறகு பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த கிருஷ்ணசாமி பின்னர் பாஜகவுக்கு எதிரான கருத்துக்களை முன்வைக்க தொடங்கினார். 

இதன் காரணமாக பாஜகவின் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த டாக்டர் கிருஷ்ணசாமி தேசிய சின்னமாக கூட்டணியில் இரந்து அதிமுக வெளியேறிய பிறகு அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ளார். 

இதற்கு காரணம் தென்காசி தொகுதியை டாக்டர் கிருஷ்ணசாமிக்கு உதைக்க பாஜக மறுப்பு தெரிவித்தது முக்கிய காரணம் என பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் எதிர்வரும் நாடாளுமன்ற பொது தேர்தலில் தென்காசி தொகுதியை அதிமுக டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சிக்கு ஒதுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதற்கிடையே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமிக்கு மறுக்கப்பட்ட தென்காசி தொகுதியில் பாஜக சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தென்காசியில் ஓராண்டுக்கும் மேலாக தேர்தல் பணியாற்றி வந்த‌ ஆனந்தன் அய்யாசாமியை பதவி நீக்கம் செய்ததன் மூலம் ஜான் பாண்டியன் கிட்டத்தட்ட சாத்தியமற்றதை செய்துவிட்டார் இன்றைய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவின் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் நிலையில் அதில் ஜான் பாண்டியன் பெயர் தென்காசி தொகுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Johnpandian contest in tenkasi behalf of BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->