கர்நாடக தோல்விக்கு இவர்கள்தான் காரணம்.. ஜெ.பி நட்டா பரபரப்பு குற்றச்சாட்டு..!! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலில் பாஜக படுதோல்வி சந்தித்தது. இந்த தோல்வி குறித்து ஆலோசனைக் கூட்டம் ஒன்று டெல்லியில் நடைபெற்றது. இரவில் மூன்று மணி நேரம் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, கட்சியின் தேசிய தலைவர் ஜெ.பி நட்டார் உள்ளிட்ட மூன்று பேர் மட்டுமே பங்கேற்று உள்ளனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் கர்நாடக மாநில தோல்விக்கு பாஜக தேசிய பொதுச்செயலாளர் பி .எல் சந்தோஷ் தான் முக்கிய காரணம் எனவும் பாஜக தலைவர்கள் யாரையும் கலந்து ஆலோசிக்காமல் பி.எல் சந்தோஷ் மற்றும் சி.டி ரவி தன்னிச்சையாக செயல்பட்டதாக எனக்கு புகார் வந்துள்ளதாக ஜெ.பி நாடார் தெரிவித்துள்ளர்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்த பி.எல் சந்தோஷை நரேந்திர மோடியும், அமித் ஷாவும் தான் தேசிய செயலாளர் பதவியை வழங்கியுள்ளனர். பாஜகவின் ஆலோசனைக் கூட்டத்தில் நேரடியாக பி.எல் சந்தோஷ் மற்றும் சி.டி ரவி மீது குற்றம் சாட்டியிருப்பது எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியலில் எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடக மாநில தேர்தல் இணைப பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு பி.எல் சந்தோஷ் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JP Natta alleges BLSantosh CTRavi is responsible for Karnataka defeat


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->