செந்தில் பாலாஜி வசம் 40 எம்எல்ஏக்கள்.. தமிழகத்தில் ஆட்சி கவிழுமா.? பரபரப்பில் திமுகவினர்.!! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கையில் 40 எம்எல்ஏக்கள் இருப்பதாகவும், தமிழகத்தில் ஆட்சி கவிழும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.

இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன், இந்துக்களின் உரிமை மீட்பு என்ற தலைப்பில் பிரச்சாரம் பயணத்தை நடத்தி வருகிறார். இந்தப் பயணத்தை கடந்த 28ஆம் தேதி திருச்செந்தூரில் தொடங்கி, ஜூலை 31ஆம் தேதி சென்னையில் நிறைவு செய்ய உள்ளார்.

இந்நிலையில், மதுரை மாநகர இந்து முன்னணி சார்பில் மதுரை ஜான்சி ராணி பூங்கா திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய காடேஸ்வரா சுப்பிரமணியன்,  மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதை நிறுத்துகிறாரோ, அப்போதான் ஸ்டாலினை தமிழக முதல்வர் என நாங்கள் அழைப்போம். அதுவரை ஆளுநரின் ஆலோசகர் என நாங்கள் அழைப்போம். 

தமிழகத்தில் விரைவில் ஸ்டாலின் ஆட்சி முடிவடையும். செந்தில் பாலாஜி கையில் 40 எம்எல்ஏக்கள் ஆதரவு வைத்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது. மகாராஷ்டிராவில் அரசியல் மாற்றம் நிகழ்ந்தது போல தமிழகத்தில் நடக்கும் வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஆதீனங்களை மிரட்டும் சம்பவங்கள் அதிகமாக நடைபெறுகிறது. திமுகவினர் எதற்கு ஆதீனங்களை மிரட்டுகிறார்கள் என்பது தெரியவில்லை என கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kadeswara subramaniam says about senthil balaji 40 mla


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->