கள்ளச்சாராய விவகாரம்: பாஜக நிர்வாகிகள் அதிரடி கைது - பெரும் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயத்தை குடித்து உயரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று காலை வரை 55-ஆக உயர்ந்துள்ளது. 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

விஷ சாராய மரணங்களைக் கண்டித்து பாஜக இன்று ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக அறிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்டம் செய்யும் பாஜகவினரை கைது செய்து வரும் போலீசார், ஒலிபெருக்கிகள், பாஜக கட்சிக்கொடிகளை அகற்றி வருகின்றனர்.

குறிப்பாக மதுரையில் மதுரை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் மூன்று மாவடி சந்திப்பு பகுதியில் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுகளை தடுக்க தவறிய தமிழக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜவினரை போலீஸ் தடுத்து நிறுத்திய போலீசார் கைது செய்தனர்.

மேலும், கள்ளசாராய மரணங்களை கண்டித்து இன்று ஓசூரில், கிருஷ்ணகிரி  மேற்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு முன்பே பாஜகவினரை காவல்துறை கைது செய்துள்ளது. 

பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்ய முற்படுவதும், அவர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதும் பல்வேறு பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kallakurichi Kallasarayam issue BJP Protest Police Arrest


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->