#BigBreaking || கள்ளக்குறிச்சி கலவரவ வழக்கில் திடீர் திருப்பம்... வன்முறைக்கான ஆணிவேரை தோண்டி எடுத்த போலீஸ்.! 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் பகுதியில் இயங்கி வந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த மாணவி மரணம் குறித்து கடந்த நான்கு நாட்களாக போராட்டம் செய்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், நேற்றைய தினம் மாணவர்கள் அமைப்பு மற்றும் சிலரால் நடத்தப்பட்ட போராட்டத்தில் வன்முறைம், கலவரமாக வெடித்தது.

மேலும் அந்த சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி அடித்து நொறுக்கப்பட்டது. வாகனங்கள் கொளுத்தப்பட்டன. போலீசாரின் வாகனம் ஒன்றும் கொளுத்தப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக கலவரத்தில் ஈடுபட்டவர்கள் 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். கைதானவர்களை நான்கு வாகனங்களில் போலீசார் நீதிமன்றத்திற்கு அழைத்து வருந்துள்ளனர். 

மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிமன்றம் முன்பாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருக்கின்றனர். இந்த கலவரம் தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 108 பேர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம் தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பியதாக கூறி நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

தங்களுடைய whatsapp ஸ்டேட்டஸ்களில் கள்ளக்குறிச்சி பள்ளி தொடர்பாகவும், மாணவி தொடர்பாகவும் தகவல்கள் பதிவிட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kallakurichi school issue social media post


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->