அண்ணா நினைவு நாள் - முதலமைச்சர் தலைமையில் அமைதிப்பேரணி.! - Seithipunal
Seithipunal


இன்று அறிஞர் அண்ணாவின் 56-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டுள்ளது. இந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க.வினரின் அமைதிப்பேரணி தொடங்கியது.

இந்த அமைதி பேரணியில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், சேகர்பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து அமைதி பேரணி புறப்பட்டு அண்ணா சதுக்கத்தை சென்றடையும். 

இதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துகிறார். அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு தி.மு.க.வினர் அமைதிப் பேரணியால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

silent rally in chennai for anna memorable day


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->