திமுகவை கதிகலங்க வைத்த காஞ்சிபுரம் மேயர் பதவி.. சற்று முன்பு வெளியான வெற்றி முடிவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் மேயர், துணை மேயர்,  நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் மகாலட்சுமி என்பவர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார். அவரை எதிர்த்து திமுக வேட்பாளர் சூரிய என்பவரும் வேட்பு மனு தாக்கல் செய்தா.ர் இதனால் காஞ்சிபுரம் மேயர் தேர்தலில் சலசலப்பு ஏற்பட்டது. மொத்தமாக மூன்று மேயர் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால் யார் வெற்றி பெறுவார்கள் என்று திமுகவினர் மத்தியில் கலக்கம் ஏற்பட்டது.

மொத்தம் 32 வார்டுகளில் வெற்றி பெற்று திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக ஒரு வார்டிலும் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். சுயேச்சையாக வெற்றி பெற்ற ஆறு பேரில் 16 ஆவது வார்டு உறுப்பினர் சாந்தி திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து திமுக கூட்டணி கவுன்சிலர்கள் பலம் 33ஆக அதிகரித்தது.

தற்போது காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மகாலட்சுமி மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருப்பத்தூர் ஆம்பூர் நகராட்சி தலைவருக்கான தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திமுக தலைமை அறிவித்த வேட்பாளரை எதிர்த்து, திமுகவை சேர்ந்த மற்றொருவர் மனு தாக்கல் செய்துள்ளார். திமுகவை சேர்ந்த இரு தரப்பினர் வாக்குவாதம் செய்ததால் தேர்தல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

திசையன்விளை பேரூராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டார். மொத்தம் 18 வார்டுகளில் திமுக, அதிமுக தலா 9 வார்டுகளில் வென்று சம நிலையில் இருந்தது. மறைமுக தேர்தலில் சமமான வாக்குகள் வந்ததால் குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் ஜான்சிராணி தேர்வானார் .

அன்னவாசல் பேரூராட்சி தலைவராக அதிமுக வேட்பாளர் சாலை பொன்னம்மாள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதிய உறுப்பினர்கள் வராததால் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanchipuram mayor election dmk candidate win


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->