கனிமொழி இழிவுபடுத்தப்பட்டுள்ளார்!...அதிமுக பெண் நிர்வாகி மீது பாய்ந்தது வழக்கு!
Kanimozhi has been defamed case has been filed against ADMK woman executive
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக, அ.தி.மு.க. நிர்வாகி சசிரேகா மீது சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கபட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. நிர்வாகி சசிரேகா, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குறித்து அவதூறான கருத்துகளை பேசியதாக கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், கனிமொழி குறித்து அவதூறாக பேசியதாக சசிரேகா மீது தி.மு.க.வினர் புகார் அளித்துள்ளனர்.
தி.மு.க. மகளிர் அணி அமைப்பாளர் கோமளவள்ளி தலைமையில் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் சசிரேகா மீது புகார் அளிக்கபட்டுள்ளது. அந்த புகாரில் , தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியை இழிவுபடுத்தும் நோக்கில் தரக்குறைவாகவும், தனிமனித ஒழுக்கத்தை பொருட்படுத்தாமலும் பேசிய சசிரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Kanimozhi has been defamed case has been filed against ADMK woman executive