''2028 ஒலிம்பிக்கில் கோலி, ரோகித் பங்கேற்க வேண்டும். ஓய்வு பெற வேண்டாம்'' முன்னாள் வீரர் வேண்டுகோள்..!
Kohli and Rohit should participate in the 2028 Olympics Dont retire former player requests
எதிர்வரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டியில் விராட் கோலி மற்றும் ரோகித் பங்கேற்க வேண்டும் என முன்னாள் இந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. அணியின் சீனியர் வீரர் கோலிக்கு 36 வயதாகிறது.கடந்த 2024-இல் உலக கோப்பை வென்றவுடன், சர்வதேச 'டி-20' அரங்கில் இருந்து இருவரும் விடை பெற்றனர். சமீபத்திய ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஏமாற்றியதால், மீண்டும் டெஸ்டில் அவர்கள் பங்கேற்பது சந்தேகமாக உள்ளது.

இது தவிர, 2027 ஒருநாள் உலக கோப்பை, 2025-2027 டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கான அணியை கட்டமைக்கும் வகையில், இருவரும் ஓய்வு பெற வேண்டும் என இந்திய கிரிக்கெட் போர்டு தரப்பில் ஏற்கனவே கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதி போட்டிக்கு இந்தியா முன்னேறியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான அந்த போட்டியுடன் இருவரும் ஒருநாள் அரங்கில் இருந்து விடைபெறலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து இந்திய அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கூறுகையில், ''ரோகித், கோலி ஓய்வு குறித்து தான் எல்லோரும் பேசி வருகின்றனர். தயவு செய்து அவர்களை தொடர்ந்து விளையாட விடுங்கள். அடுத்து 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், மீண்டும் கிரிக்கெட் இடம் பெற்றுள்ளது. இதில் இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ''ஒலிம்பிக் வீரர்களாக ரோகித்தும், கோலியும் இந்தியாவுக்கு பதக்கம் வெல்வதைப் போல, வேறு எதுவும் சிறந்தது இருக்காது,'' என்றும் ஸ்ரீசாந்த் கூறியுள்ளார்.
English Summary
Kohli and Rohit should participate in the 2028 Olympics Dont retire former player requests