"அன்னப் போஸ்ட்டாக" தேர்வாகும் கனிமொழி... குஷியில் திமுக உடன்பிறப்புகள்.!!
Kanimozhi will be select asTuticorin DMK candidate
நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் இத்தகைய சூழலில் அமாவாசை நாளான இன்று திமுக மற்றும் அதிமுக தங்கள் வேட்பாளர்களுடன் நேர்முக காணலை நடத்தி வருகிறது.
அதிமுக தலைமை அலுவலகம் எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமான தாக்கல் செய்த வேட்பாளர்களுடன் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக கலந்த ஆலோசித்தார்.
அதேபோன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் திமுக வேட்பாளர்களை நேரடியாக சந்தித்து தொகுதி நிலைமை மற்றும் வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டு அறிந்தார்.
அதன்படி திமுக சார்பில் தூத்துக்குடி தொகுதியில் களமிறங்க திமுக துணை பொதுச் சயலாளரும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். அதன் அடிப்படையில் அவருடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெற்றி வாய்ப்பு மற்றும் தொகுதி நிலைமை குறித்து கேட்டு அறிந்தார்.
தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கனிமொழி மட்டுமே விருப்பமான தாக்கல் செய்துள்ளதால் அவர் போட்டியின்றி அன்னப்போஸ்டாக திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார்.
English Summary
Kanimozhi will be select asTuticorin DMK candidate