கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பல்வேறு மாவட்டங்களில் நிறைவடைந்த வளர்ச்சித் திட்டங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் செயல்பட்டு வருகிறார். 

அந்த வகையில், புதுமைப்பெண் திட்ட விரிவாக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும், தி.மு.க. நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தவும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.

மேலும், கன்னியாகுமரியில் நடக்கும் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இந்நிலையில், கன்னியாகுமரியில் 3 நாட்கள் நடைபெறுவதாக இருந்த திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 30, 31 ஆகிய இரண்டு நாள்கள் மட்டுமே நடைபெறும் என அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும், டிசம்பர் 31ம் தேதி நடைபெற இருந்த கலை நிகழ்ச்சிகள் அனைத்தும், மன்மோகன் சிங் மறைவையொட்டி ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரி 1ம் தேதி நடைபெற இருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் டிசம்பர் 31ம் தேதி நடைபெறும் எனவும் அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kanniyakumari thiruvalluvar DMK MK Stalin TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->