திமுக பொதுக் கூட்டத்தில் சாமி வந்து ஆடிய பெண்கள்! காரைக்குடி கருப்பசாமி இறங்கியதால் பரபரப்பு! - Seithipunal
Seithipunal


காரைக்குடி அருகே திமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட திமுகவின் மகளிர் அணியை சேர்ந்த பெண்கள், கருப்புசாமி பாட்டுக்கு சாமி ஆட்டம் ஆடி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பகுதியில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு முன்பாக பெண்களை உற்சாகப்படுத்த பாட்டு கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பாட்டு கச்சேரியில் கருப்புசாமி பாடல் இசைக்கப்பட்ட உடன், திமுக மகளிர் அணியை சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்ட பெண்கள் எழுத்து சாமியாட்டம் ஆடினர்.

அதில் ஒரு சில பெண்கள் மயக்கம் அடைந்து சுருண்டு விழுந்தனர். பின்னர் பாட்டை நிறுத்திவிட்டு மயக்கமான பெண்களுக்கு தண்ணீர் கொடுத்து திமுகவினர் ஆசுவாசப்படுத்தினர்.

இந்த பரப்பரப்புகள் அடங்கிய பின்னர்,  பொதுக் கூட்டத்தில் திமுக அமைச்சர் கே ஆர் பெரியகருப்பன், மாவட்ட துணைச் செயலாளர்கள், நகராட்சி தலைவர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karaikudi DMK Meeting Some Incident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->