கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி.. கண்ணீர் மல்க நன்றி தெரிவித்த மாநில தலைவர் சிவக்குமார்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா சட்டமன்ற பொது தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 306 அறைகளில் 4,256 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்குகள் என்னும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சியமைக்க 113 தொகுதிகள் தேவைப்படும் நிலையில் காங்கிரஸ் 137 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்து வருகிறது. ஆளுங்கட்சியான பாஜக 62 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. 

மேலும், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 76 தொகுதிகளில் 48 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும், 20 தொகுதிகளில் பாஜகவும், 8 தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளமும் வெற்றி பெற்றுள்ளது. 

அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதால் கர்நாடக காங்கிரஸ் கட்சியின் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். 

இந்த நிலையில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க உள்ள நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமாருக்கு ஆனந்த கண்ணீர் வந்துள்ளது. வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி என டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka assembly election TK sivakumar thanks to peoples


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->