கே.எஸ்.ஆர் வறண்டால்? "சவப்பெட்டியின்‌ கடைசி ஆணி".. தமிழ்நாட்டின் உரிமையை எதிர்க்கும் பாஜக .!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறக்க வேண்டிய மார்ச் மாதத்திற்கான நீர் பங்கீட்டினை கர்நாடக அரசு கே.எஸ்.ஆர் அணையில் இருந்து இன்று திறந்து விடுகிறது. இதற்கு கர்நாடக பாஜக கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.

 

கர்நாடக பாஜக தலைவர்களில் ஒருவரான சி.டி ரவி‌ தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் "கர்நாடகாவின் சவப்பெட்டியில் கடைசி ஆணி என்னவாக இருக்கும், காங்கிரஸ் அரசு கேஆர்எஸ் அணையில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்து விடுகிறது.

காவிரி நீரை நம்பியுள்ள பெங்களூரு மற்றும் பிற பகுதிகள் தண்ணீர் பற்றாக்குறையால் தவித்து வரும் நிலையில், மாநில அரசின் இந்த அதிர்ச்சிகரமான நடவடிக்கை நிகழ்ந்துள்ளது.

கன்னடர்களின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் வந்திருக்கிறதா அல்லது அதன் கூட்டணிக் கட்சியான திமுகவின் நலனைப் பாதுகாக்க இருக்கிறதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. நாளை (இன்று) கேஆர்எஸ் அணை வறண்டால் என்ன நடக்கும்?

கன்னடர்களைப் பார்த்துக் கொண்டிருக்கும் கடுமையான தண்ணீர்ப் பிரச்சினையை இந்த திறமையற்ற அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கும்? என கேள்வி எழுப்பி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karnataka Bjp leader CTRavi against cauvery water open to tn


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->