#சற்றுமுன் வெளியான தேர்தல் முடிவுகள்: அதிர்ச்சியில் பாஜக தொண்டர்கள்.! கெத்து காட்டிய காங்கிரஸ்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் முன்னிலை பெற்று இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

வெளியான முடிவுகளின்படி, இந்த தேர்தலில் பாஜகவை பின்னுக்குத்தள்ளி காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று இருப்பது அனைவராலும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

மொத்தம் 58 உள்ளாட்சி அமைப்புகளில், 1184 வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 498 வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

இரண்டாவதாக பாரதிய ஜனதா கட்சி 437 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் 204 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களை கைப்பற்றியுள்ளது. 

கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி கணிசமான இடங்களில் வெற்றி பெற்று இருப்பது, அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இது உள்ளாட்சித் தேர்தல் என்பதால் பாஜகவுக்கு ஒரு பாதிப்பும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

KARNATAKA LOCAL ELECTION RESULT CONGRESS LEADING


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->