தேவரையே இழிவு படுத்தும் செயல்.. கருணாஸ் வெளியிட்ட பரபரப்பு அறிவிப்பு.!  - Seithipunal
Seithipunal


அக்டோபர் 30ஆம் தேதியான நாளை தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு இந்த விழாவில் பல்வேறு அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ள இருக்கின்றனர். தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடையானது முக்குலத்தோர் புலிப்படை சார்பில் அமைக்கப்பட்டது. அதை போலீசார் அப்புறப்படுத்தி விட்டதாக முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார். மேலும் பசும்பொன்னில் இருக்கும் அவரது சொந்த இடத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கருணாஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர், " பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்திவிழாவை முன்னிட்டு பசும்பொன்னில் முக்குலத்தோர் புலிப்படை சார்பில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்ற விழா மேடையை அமைத்தோம். ஆனால் நாங்கள் அமைத்த மதுரை விமான நிலைய மாதிரி தோற்றத்தை கமுதி சரக டிஎஸ்பி மணிகண்டன் அவர்கள் அந்த பிரமாண்ட மேடையை ஒரு அரம்பர் கும்பலை போல் வந்து அப்பறப்படுத்திவிட்டார். 

ஒரு மேடையை அப்புறப்படுத்த அந்தப் பகுதி வட்டாட்சியருக்குத்தான் உரிமை உண்ட. அதுவும் முன்னனுமதி கடிதம் கொடுத்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால் ஒரு காவல் டிஎஸ்பி எந்த ஒரு முன் அறிவிப்புமின்றி அராஜகமுறையில் மாதிரி விமான நிலைய மேடையை அப்புறப்படுத்தியது வன்மையாகக் கண்டிக் கத்தக்கது.

இது தேவரையே இழிவுப்படுத்தும் செயலாகும். முக்குலத்தோர் புலிப்படையின் நீண்ட நாள் கோரிக்கையான " மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் உ. முத்துராமலிங்க பெயரைச் சூட்ட வேண்டும்! என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கிறேன் இதுவரை மத்திய மாநில அரசுகள் அதற்கான எந்த முயற்சியும் எடுக்கவில்லை! ஆகவே நாங்கள் " பசும்பொன் உ. முத்துராமலிங்க தேவர் பெயரில் மதுரை விமான நிலையத்தின் மாதிரி தோற்றத்தை பிரமாண்டமாக அமைத்து விழா வரவேற்பு வாயிலாக அமைத்தோம். 

அரசுக்கு எழுத்துவடிவில் மனுகொடுத்தால் கேட்கவில்லை ஆகவே எனது கோரிக்கையை கலைவடிவில் காணட்டும் என்று மாதிரி விமான நிலையத்தை பசும்பொன்னில் அமைத்துள்ளேன்! அந்த விமான நிலைய மேடையில்தான் அன்னதானம், உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நடக்கவுள்ளன!" இந்நிலையில் திடீரென்று கமுதி டிஎஸ்பி மணிகண்டன் இந்த மாதிரி தோற்றத்தை அப்புறப்படுத்தியது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. ஆகவே, காவல்துறை அராஜக செயலைக் கண்டித்து பசும்பொன்னில் எனது சொந்த இடத்தில் 30.10.2022 அன்று சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karunas About Devar jayanthi 2022


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->