முதல்வர் குறித்து அவதூறு... கரூர் மாவட்ட அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது..!!
Karur District AIADMK IT Wing admin arrested
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாவலடி கார்த்திக் என்பவர் அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் தனது சமூக வலைதள பக்கத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் திமுக நிர்வாகி கரூர் மாவட்ட நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் கரூர் மாவட்ட அதிமுக ஐடி விங் துணைத் தலைவர் நாவலடி கார்த்திக் இன்று காலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த அதிமுக நிர்வாகிகள் கரூர் நகர காவல் நிலையம் முன்பு குவிய தொடங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர் துரைமுருகன் குறித்து பொள்ளாச்சியை சேர்ந்த அதிமுக ஐடி விங் நிர்வாகி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் தற்போது ஜாமினில் வெளிய வந்துள்ளார். இந்த நிலையில் கரூர் மாவட்ட அதிமுக ஐடி விங் துணைத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Karur District AIADMK IT Wing admin arrested