பாலியல் புகாரில் கொலை முயற்சி | காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு பதிவு - இறங்கி களமாடிய பாஜக, கம்னியூஸ்ட்! - Seithipunal
Seithipunal


கேரளா மாநிலம், பெரும்பாவூர் சட்டமன்ற தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ எல்தோஸ் குன்னப்பிள்ளி. இவர் மீது பள்ளி ஆசிரியை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். மேலும், 30 லட்சம் வரை ஆசிரியைக்கு எம்எல்ஏ பேரம் பேசியதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த விவகாரத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஆசிரியை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் எம்.எல்.ஏ எல்தோஸ் மீது paliyal vankodumai, கொலை முயற்சி உள்ள 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாக தற்போது போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பாலியல் புகார் குறித்து விளக்கமளிக்குமாறு காங்கிரஸ் தரப்பில் எம்எல்ஏ எல்தோஸிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. ஆனால், அவர் தலைமறைவாக உள்ளதால், எந்த பதிலும் எங்களுக்கு வரவில்லை. 

கூடிய சீக்கிரம் எம்.எல்.ஏ எல்தோஸ் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை ஆளும் கம்னியூஸ்ட் பாஜக தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தினால் தான் போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kerala congress mla attempt murder case


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->