இனி தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாது.. நடிகை குஷ்புவின் பரபரப்பு கடிதம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பூ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது தேர்தல் களத்தில் தொடர்ந்து பிரச்சாரம் செய்ய முடியாது என பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவுக்கு கடிதம் எழுதி இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் "தனக்கு 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட விபத்தின் காரணமாக கடந்த ஐந்து ஆண்டுகளாக தொடர்ந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். மருத்துவர்கள் நான் பிரச்சாரம் மேற்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தி இருந்தனர்ம.

இருபினம் பாஜக மீதான பற்றின் காரணமாக தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தேன். ஆனால் தற்போது உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதன் காரணமாக நான் தீவிர ரசிகிச்சை எடுக்க வேண்டும் என மருத்துவர்களின் அறிவுறுத்தல் படி என்னால் இனி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள முடியாது. 

கனத்த இதயத்துடன் இந்த கடிதத்தை தங்களுக்கு அனுப்புவதாக நடிகை குஷ்பூ ஜே.பி நட்டாவிடம் தெரிவித்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களில் பாஜகவுக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்வேன் எனவும் நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Khushboo wrote letter to BJP head she cannot campaign at field


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->