கே.என். நேருவின் மகனுக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம்.? வழங்கப்படப்போகும் முக்கிய பதவி.!!
kn nehru son arun poster
திருச்சி மலைக்கோட்டை என்றால் திமுகவின் அசைக்கமுடியாத சக்தியாக கே. என். நேரு உள்ளார். இவர் கருணாநிதி காலத்திலிருந்தே திமுகவில் இருந்து வருகிறார். திமுகவின் முதன்மை செயலாளர் பதவி உயர்வு பெற்றுள்ளார் கே.என். நேரு. இதுவரையிலும் தனக்கு பிறகு அடுத்த வாரிசாக தனது மகன் அருணை கொண்டு வராமல் இருந்தார்.
முதன்முறையாக திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் திமுகவின் கவனத்தை ஈர்த்தவர் கே.என். நேரு மகன் அருண். மாநாட்டு மேடையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் காலில் விழுந்து ஆசி பெற்றார். கே.என்.நேருக்கு முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் டி.ஆர்.பாலு அதிர்ப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.
![](https://img.seithipunal.com/media/fdhfgh-gfdja.jpg)
இது ஒரு புறம் புகைந்து கொண்டிருக்க, அருண் நேருவுக்கு இளைஞரணியில் முக்கிய பதவி வழங்கப்போவதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் திருமண விழாவிற்காக கே.என்.நேருவின் மகன் அருணை மையமாக வைத்து திருச்சியில் போஸ்டர் ஒட்ப்பட்டிருப்பது, திமுகவினர் மத்தியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.