அடங்கமறு., ஊரான் நிலத்தை ஆட்டையைப்போடு., விசிக கொடியை நடு.! சீரிய சிறுத்தையை சிறையில் அடைத்த போலீஸ்.! - Seithipunal
Seithipunal


கொடைக்கானலில் 4 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்ற, விடுதலை சிறுத்தை கட்சி நகரச் செயலாளர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் அதிரடியாக கைது, செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே உள்ளது வடகவுஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன், இவருக்கு வயது 35 ஆகிறது. இவர் அதே பகுதியை சேர்ந்த மெரினா என்பவரிடம் வேலை பார்த்து வந்துள்ளார்.

இதற்கிடையே, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வசந்தா என்பவரிடம் மெரினா 4 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளார். அப்போது அந்த நான்கு ஏக்கர் நிலத்திற்கான தொகையில் ஒரு பகுதியை மட்டும் கொடுத்த மெரினா, மீதி பணத்தை பிறகு தருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் மெரினாவும் அவரின் கணவரும் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. மெரினா மற்றும் அவரின் கணவர் உயிரிழந்த நிலையில், அவரிடம் வேலைபார்த்த கணேசன், இந்த தம்பதி கடந்த இரண்டு ஆண்டுகளாக தனக்கு ஊதியம் தரவில்லை என்று மெரினா வாங்கிய நிலத்தை இவர் சொந்தம் கொண்டாட ஆரம்பித்துள்ளார்.

அதே சமயத்தில், நிலத்தின் சொந்தக்காரரான வசந்தா, 'தன்னிடம் 4 ஏக்கர் நிலத்திற்கான தொகையில் ஒரு பகுதியை மட்டுமே மெரினா தந்துள்ளார், மீதி தொகையை தரவில்லை. அந்த நிலம் எனக்கு சொந்தம்" என்று தெரிவித்துள்ளார்.

இதனால் கணேசன், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் இன்பராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் சேர்ந்து வசந்தா விடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். 

மேலும், கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி கணேசன், இன்பராஜ் உள்ளிட்ட விசிக கட்சி நிர்வாகிகள் மீது அந்த நிலத்திற்குச் சென்று விடுதலை சிறுத்தை கட்சியின் கொடியை ஏற்றி தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, வசந்தா மற்றும் கனகராஜை ஆபாச வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த இருவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, பின்னர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஆயுதங்களால் தாக்குதல், கொலை மிரட்டல், ஆக்கிரமிப்பு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும், விடுதலை சிறுத்தை கட்சி நகர செயலாளர் இன்பராஜ் மற்றும் கணேசன் ஆகிய இருவரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த வழக்கில் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த சிலரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kodaikanal land issue vck member arrest


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->